கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” - ஆம்னி பஸ்களுக்கு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் “கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” எடுக்கப்படும் என்று  அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், அரசு பஸ் மற்றும் ஆம்னி பஸ் சேவையை பயன்படுத்துவார்கள். கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள்.

அந்தவகையில் வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தற்போது ஆம்னி பஸ்கள் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார் . மேலும் இந்த குழுக்கள் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் நேரடியாகச் சென்று கண்காணிப்புகள் மேற்கொள்வர்” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action will be taken if extra charges are collectedMinister Sivasankar warns Omni buses


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->