நெல்லையில் அதிரடி! பெட்ரோல் குண்டு வீச்சாளர்கள் மீது 'குண்டாஸ்' சட்டம்...! - காவல்துறை அதிரடி நடவடிக்கை - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (எ) கொம்பையா (23) மற்றும் பரமசிவன் மகன் பாலமுருகன் (19) ஆகிய இருவர், கடந்த 29.03.2026 அன்று நெல்லை மாநகர டவுண் வட்டாரத்தில் பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தலை உருவாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கண்டறியப்பட்டனர்.

பொதுச் சமாதானத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் விதமாக செயல்பட்ட இவர்களின் நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி டவுண் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களின் விசாரணை மற்றும் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில், நெல்லை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி, இவ்விருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action in Nellai Gundas law against petrol bombers Police take action


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->