ஒரே பெயரில் பல மின் இணைப்பு.. மின்வாரியம் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


ஒரே வளாகத்தில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் இருப்பது குறித்து ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரே வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் உள்ள எல் டி சி மின் இணைப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

குடியிருப்புகளை ஆய்வு செய்து ஒவ்வொரு குடியிருப்புகளிலும் எத்தனை மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை கணக்கெடுப்பு அதோடு குடிநீர் வினியோகம் பொது இடங்களில் பயன்படுத்தும் மின்விளக்குகள் தடையற்ற மின் வினியோகம் செய்யும் கருவி ஆகியவற்றிற்கு ஒரே வளாகத்தில் தனி இணைப்பு இருந்து மின்சாரம் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், உயர் மின் அழுத்த மாற்றம் அவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கும் எங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொள்ளும் போது பல இணைப்புகள் ஒரே பெயரின் கீழ் ஒரே வளாகத்தில் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action if there are multiple electrical connections under the same name


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->