தமிழகத்தில் தான் இமாலய சாதனை, ஆட்சிகாலத்தில் மற்ற மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்தார்..! இப்போது நாம் அவர்களை..
தமிழ்நாட்டின் எதிர்கால நலனுக்காக எத்தனையோ திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்திய முதல்வர்
ஐயா காமராசர் கட்டிய அணைகளின் லிஸ்ட் மட்டும் ,
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை, 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது...மேட்டூர் அணையில் ரூபாய் 2.5 கோடியில் பாசன கால்வாய்கள், இதனால் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது.
அமராவதி அணை 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதனால் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றது..ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர்..
2.5 கோடி ரூபாய் மதிப்பில் வைகை அணை அமைக்கப்பட்டது.. இதன் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது.
2.5 கோடி ரூபாய் செலவில்சாத்தனூர் அணை, இதன் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றது..

வாலையாறு அணை 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது, இதன் மூலம் 6,500 ஏக்கர் நிலம்பயன் பெறுகிறது இதனால் விவசாயி குடும்பம் உள்பட உற்பத்தி துறையில் பல குடும்பங்கள் பயனடைந்தது
மங்கலம் அணை 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது, இதன் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது, நாட்டின் முதன்மை தொழில் ஆன விவசாயத்திற்கே ஏகப்பட்ட நன்மையை செய்துள்ளார்..
நாட்டின் முதுகெலும்பை பல படுத்துவதிலே தன்னை அற்பணித்துள்ளார்
அப்போது தொழில் துறையில் சாதிக்க வில்லையா..?
சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பகுதி , நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், எண்ணூர் அனல் மின் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் என சொல்லிக்கொண்டே போகலாம்..
சிமென்ட் தொழிற்சாலை காகித உற்பத்தி தொழிற்சாலை, அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை, மாக்னசைட்,சுண்ணாப்பு சுரங்கங்கள், ரப்பர் தொழிற்சாலைகள்..என தொழில் மயமாதலுக்கு உறுதுணையாக நின்றுள்ளார்

1952 பொதுத்தேர்தலில் காமராஜர், ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவை தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுள் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.
அதே ஜி.டி.நாயுடு, காமராஜர் முதல்வரான பின், அவர் செய்த சாதனைகளை பார்த்து காமராஜர் தான் என்றென்றும் தமிழக முதல்வராக இருக்க வேண்டும்என்றார்.
ஈ.வே.ரா, இவரை "பச்சைத் தமிழன்' என பாராட்டினார்.

காமராஜர், ரஷ்யாவுக்கு செல்லும் போது அணிய கோட் தைத்திருந்தார்.
ஆனால் காமராசரோ கதர் சட்டை கதர் வேட்டியுடன் தான் சென்று வருவேன் எனக் கூறி சென்று வந்தார்.
காமராஜர், 1975 அக்.2ல், மறைந்தார். இறந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது.

பேங்க் அக்கவுண்டோ, சொத்தோ இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது