வயலில் வேலை செய்தபோது விபத்து...! - மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி...! - நடந்தது என்ன...?
accident while working field Farmer dies electrocution What happened
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வடக்கு தெருவைச் சேர்ந்த 37 வயதான பால்ராஜ், விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர். க.சுப்ரமணியபுரம் பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு வந்தார். கடந்த மார்ச் 26ஆம் தேதி, தனது வயலில் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு, இயந்திரத்தின் உதவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார்.

அந்த வேளையில், எதிர்பாராதவிதமாக மேலே சென்றிருந்த உயர் அழுத்த மின்கம்பி அறுவடை இயந்திரத்தை உரசியதால், மின்சாரம் நேரடியாக பால்ராஜ் மீது பாய்ந்தது.
அதிர்ச்சி தாக்கத்தில் அவர் பலத்துச் சிதறி விழுந்ததுடன், உடலில் சுமார் 70 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டன.உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மார்ச் 31ஆம் தேதி மதுரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் பல நாட்கள் போராடிய பால்ராஜ், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார் என்பது பரிதாபகரமானதாகும்.
இந்த சம்பவம் குறித்து கழுகுமலை காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறுவடைப் பணியின் போது நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
accident while working field Farmer dies electrocution What happened