வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பு; அபய் குமார் சிங்கிற்கு பொறுப்பு டிஜிபியாக கூடுதல் பதவி..!
Abhay Kumar Singh gets additional charge as DGP in charge
பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பு எடுத்துலதான் காரணமாக அந்தப் பதவி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக உள்ள அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். அவருக்கு நேற்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, வெங்கட்ராமன் 15 நாள் மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அபய்குமார் சிங் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பதவியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Abhay Kumar Singh gets additional charge as DGP in charge