சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பற்றி எரிந்த தீ; 12 பேர் பலி..!
12 killed in residential building fire in China
சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ வேகமாக பரவியதால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால், இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த ஒரு வாரத்துக்கு முன் சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
12 killed in residential building fire in China