14 வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி; 08 வது முறையாக சாம்பியன் வென்ற ஜெர்மனி; வெண்கலம் வென்ற இந்தியா..!
Germany wins 08th title and India wins bronze in 14th Junior Hockey World Cup
21 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற்றது.
வெண்கலப் பதக்கத்துக்காகநடைபெற்றஇந்த போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 02-வது பாதியில் எழுச்சி பெற்ற இந்திய அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது.
முழு நேர ஆட்ட முடிவில், தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
இதன்மூலம் 14-வது ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இன்று இரவு 08 மணிக்கு நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் அணியான ஜெர்மனி, 04-ஆம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொண்டது.
இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 08 வது முறையாக ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
English Summary
Germany wins 08th title and India wins bronze in 14th Junior Hockey World Cup