ஆந்திராவில் இறந்த மகனுக்காக ரூ.45 லட்சத்தில் பளிங்கு கற்களால் நினைவிடம்; மாதந்தோறும் அன்னதானம்; அளவிடமுடியாத பெற்றோரின் அன்பு..!
Parents in Andhra Pradesh have built a marble memorial for their deceased son at a cost of Rs 45 lakhs
ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ஸ்ரீதேவி. தம்பதியின் மகன் வேத சாய் தத்தா. தற்போது 13 வயது.
கடந்த 2016-ஆ ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு வேத சாய் தத்தா இறந்துள்ளான். மிகவும் பாசத்துடன் வளர்த்த மகன் இறந்துவிட்டதால் அந்த பெரும் வலியில் இருந்து மீள முடியாமல் தந்தையும் தாயும் தவித்து வந்துள்ளனர். தங்கள் பாசமிகு மகன் மீதான தங்களின்அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவனுக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, கிழக்கு கோவதாரி மாவட்டம், கொருக்கொண்டா அடுத்த கனுப்பூரில் உள்ள விவசாய நிலத்தில் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தம்பதியினர் நினைவிடம் கட்டியுள்ளனர்.
சுமார் ரூ.45 லட்சம் செலவில் பளிங்கு கற்களால் ஆன நினைவிடம் கட்டப்பட்டு, அதற்கு 'வேத சாய் தத்த மந்திர்' என பெயரிட்டுள்ளனர்.இந்த நினைவிடத்தை சுற்றிலும் வண்ண மலர்களால் ஆன பூந்தோட்டம் அமைத்துள்ளனர். தங்கள் மகனின் நினைவாக ஓம்காரேஸ்வரர் அறக்கட்டளை நிறுவி ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளனர். அத்துடன், மாதந்தோறும் 05-ஆம் மற்றும் 19-ந் தேதிகளில் அன்னதாமமும் வழங்கி வருகின்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Parents in Andhra Pradesh have built a marble memorial for their deceased son at a cost of Rs 45 lakhs