பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் CIC தேர்வு சந்திப்பு; மத்திய அரசின் தேர்வுகளுடன் உடன்படாத ராகுல் காந்தி..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இன்று (டிசம்பர் 10) மதியம் சந்தித்தனர். சுமார் 88 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது, மத்திய அரசின் தலைமை தகவல் கமிஷனர் மற்றும் 08 தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இக்கூட்டத்தில் ராகுல் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

சட்ட விதிமுறைகளின்படி தலைமை தகவல் கமிஷனர், தகவல் கமிஷனர்கள் மற்றும் லஞ்சஒழிப்புதுறை தலைவரை பிரதமர், அவர் நியமிக்கும் மத்திய அமைச்சர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும்.

அதன்படி, இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மதியம் 01:07 மணிக்கு ராகுல் வந்ததும் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் தற்போது காலியாக உள்ள மத்திய அரசின் தலைமை தகவல் கமிஷனர், 08 தகவல் கமிஷனர்கள் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய கமிஷனர் பதவிகளை நிரப்புவது குறித்து மூவரும் ஆலோசனை நடத்தினர்.

சுமார், 88 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில், சிலரது பெயர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும், அதற்கு ராகுல் எழுத்துப்பூர்வமாக தனது எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வது வழக்கமான ஒன்று என்றும்,  முன்பும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்ற கார்கே மற்றும் ராகுல் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ஹிராலால் சமாரியா கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனால், இந்தப்பதவி காலியாகவுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டப்பிரிவு 12(3) ன் கீழ் தலைமை தகவல் கமிஷனர் மற்றும் தகவல் கமிஷனர்கள் பிரதமர் தலைமையிலான குழுவால் நியமனம் செய்யப்படுகின்றனர். 

10 தகவல் கமிஷனர்களில் தற்போது, ஆனந்தி ராமலிங்கம் மற்றும் வினோத் குமார் திவாரி ஆகியோர் மற்றுமே பணியாற்றி வருகின்றனர். ஆகையால் எஞ்சிய 08 பதவி காலியாகவுள்ளது. தகவல் அறியும் உரிமை தொடர்பான புகார்கள் இவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் 30,838 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul consults with PM Modi and Amit Shah on appointment of CIC and Information Commissioners


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->