ஆடி கிருத்திகை.. திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஆடி கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் இந்து சமய பண்டிகையாகும். பொதுமக்கள் பலரும் கிருத்திகை நாட்களில் தமிழ் கடவுளான முருகன் கோயில்களுக்கு சென்று வழிபடுவர். அதனால் முருகன் கோயிலில் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

முருகனுக்கு உகந்த ஆடி கிருத்திகை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெறும். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். 

அதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி ஆடி கிருத்திகை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளது. இதில் திருத்தணியில் இருந்து 25 பேருந்துகளும், திருப்பதியில் இருந்து 75 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னை மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணிக்கு தலா 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadi Kiruththikai special Bus service to thiruthani


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->