காதல் திருமணம் செய்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை..கணவர்  சரண்..  வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


நெல்லையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை  செய்த சம்பவத்தில் கணவர் போலீசில் சரண் அடைந்தார். 

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணான பிரித்திகா என்பவரை காதலித்து 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம்திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோரிடம் அன்புராஜ் பெண் கேட்டுள்ளார். இருவரும் ஒரே சமூகமாக இருந்த போதிலும், திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது பெற்றோரின் சம்மதத்துடன் அன்புராஜ் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து இருவரும் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தநிலையில் பிருத்திகா அவரது குடும்பத்தினருடன் போனில் பேசுவது அன்புராஜிக்கு பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவில் பிருத்திகா தனது தாய் மற்றும் சகோதரரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டுக்கு வந்த கணவன் அன்புராஜ் போனில் பேசியதை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மனைவி பிரித்திகா அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெறித்து  வீட்டில் காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிருத்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதையடுத்து அன்புராஜ் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுநெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார்.மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "அன்புராஜ்-பிரித்திகா ஆகியோர்  திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் அதாவது கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் சுமார் 1 1/4 வருடங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் 2 பேரும் சேர்ந்து வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். உள்ளூரில் இருந்தால் பிரச்சினை வந்து கொண்டிருக்கும் என்று கருதி நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்திற்கு வந்து வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

 தனது மாமியாருடன் பேசக்கூடாது என்று பிரித்திகாவிடம் கூறியிருந்துள்ளார். இதனால் பிரித்திகா தனது தாயாருடன் பேசுவதை தவிர்த்த நிலையிலும், அவரது தாய் அவ்வப்போது பிரித்திகாவிடம் பேசி வந்ததால் மாமியார் குறுக்கீடாக இருக்கிறாரே என்ற ஆத்திரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் பிரித்திகாவின் கொலையில் முடிந்துள்ளது" என தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young woman who had a love affair was strangled to death Husband Saran Sensational news released


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->