இன்ஸ்டாகிராமில் அடுத்த மாஸ் அப்டேட்...! இன்ஸ்டா கொண்டு வரும் புதிய வசதி... என்னவென்று தெரியுமா...? - Seithipunal
Seithipunal


உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த தளம், இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி பயனர்களை கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப காலத்தில் புகைப்படங்களை பகிரும் செயலியாக மட்டுமே அறிமுகமான இன்ஸ்டாகிராம், பின்னர் வீடியோ பதிவேற்ற வசதி, நேரலை அம்சம் உள்ளிட்ட பல புதுமைகளை அறிமுகப்படுத்தி தனது பயன்பாட்டை விரிவுபடுத்தியது. குறிப்பாக, டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு அறிமுகமான ‘ரீல்ஸ்’ வசதி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பயனர்களை தொடர்ந்து ஈர்க்கும் நோக்கில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை பதிவிட்ட பிறகும் திருத்திக்கொள்ளும் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நடைமுறையில், ஸ்டோரியில் எழுத்துப் பிழை, தவறான குறியீடு அல்லது தேவையற்ற ஸ்டிக்கர் இடம்பெற்றிருந்தால், அதை நீக்கிவிட்டு மீண்டும் பதிவேற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் புதிய ‘எடிட் ஸ்டோரி’ வசதி மூலம், ஏற்கனவே பதிவிட்ட ஸ்டோரிகளையே நேரடியாக திருத்தும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இந்த புதிய அம்சம் தற்போது சில ஐபோன் பயனர்களிடம் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், வாட்ஸ்அப்பிலும் இன்ஸ்டாகிராமின் ‘நெருங்கிய நண்பர்கள்’ வசதியை போன்ற புதிய தனியுரிமை அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலக சக ஊழியர்கள் என தனித்தனி பட்டியல்களை உருவாக்கி, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸ்களை பகிரும் வசதி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அம்சமும் தற்போது பீட்டா பயனர்களிடம் சோதனை கட்டத்தில் உள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

next mass update Instagram new feature that Insta bring Do you know what


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->