பயிர்க்கடன் தள்ளுபடி என்பது வெறும் ஏமாற்று வேலை...! - த.வெ.க அரசுக்கு எதிராகப் பொங்கிய உதயநிதி...! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக நினைவூட்டியுள்ளார்.

ஆனால் தற்போது ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்களுக்கு மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி மட்டுமல்லாமல், தேர்தல் வாக்குறுதியில் செய்யப்பட்ட நம்பிக்கை மோசடி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “ஏற்கனவே 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, பின்னர் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அந்த சலுகை கிடையாது என பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தார்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் புதிய குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தொடர்ந்து ஏமாற்றங்களை சந்திக்கும் நிலை உருவாகி வருவதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

“இப்படி இன்னும் எத்தனை அதிர்ச்சிகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் முதல்-அமைச்சரே?” என கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Crop loan waiver just scam Udhayanidhi lashes out against Tvk government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->