தமிழக அரசியலை சீண்டிய பவன் கல்யாண்..! 'மிக எளிதாக ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள்'...! - ஆந்திரா துணை முதல்வரின் அதிரடி சாடல்
Pawan Kalyan who ruined Tamil Nadu politics They come power very easily Andhra Pradesh Deputy Chief Minister sharp attack
தமிழகத்தில் நடைபெற்ற சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இந்த வெற்றி அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்ததுடன், புதிய அரசியல் அத்தியாயத்திற்கும் வழிவகுத்ததாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் பதவியேற்ற நாளிலேயே ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தனது வாழ்த்துகளை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், ஆந்திராவில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் பவன் கல்யாண் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த நிகழ்ச்சியில் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்கள் மிக வேகமாக நிகழ்கின்றன. அங்கு மக்கள் மிக எளிதாக புதிய தலைமையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் ஆந்திராவில் நான் 15 ஆண்டுகளாக அரசியல் பயணம் மேற்கொண்டபோதும், இத்தகைய பிரம்மாண்டமான வெற்றியை இதுவரை காணவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “விஜய் பெற்றிருக்கும் அரசியல் வரவேற்பை பார்க்கும்போது எனக்கே சற்று பொறாமையாக இருக்கிறது” என்று பவன் கல்யாண் நகைச்சுவையுடன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pawan Kalyan who ruined Tamil Nadu politics They come power very easily Andhra Pradesh Deputy Chief Minister sharp attack