லிப்ட் தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்;பூசாரி கைது!
A young woman was raped under the pretense of giving lift a priest arrested
பாகல்கோட்டில் லிப்ட் தருவதாக கூறி விடுதிக்கு இளம்பெண்ணை கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்த பூசாரி கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் மேகாலி கிராமத்தில் ராமர் கோவிலில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.இந்நிலையில், சம்பவத்தன்று இந்த பூசாரி 17 வயது இளம்பெண் ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன். லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்து விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.தொடர்ந்து, இதேபோல விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணை விட்டு விட்டு, அவர் தப்பி விட்டார். நடந்த சம்பவம் பற்றி இளம்பெண் அவருடைய பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பூசாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.பெலகாவி போலீஸ் சூப்பிரெண்டு பீமாசங்கர் எஸ். குலெட் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
A young woman was raped under the pretense of giving lift a priest arrested