கரூர்: திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை...!! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்துகொள்ள சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்தியதால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள மணியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு பானுப்பிரியா என்ற மகள் இருக்கிறார். பானுபிரியாவிற்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் பானுப்பிரியா அதற்கு மறுப்பு தெரிவித்தார் ஆனாலும் அவருக்கு திருமணம் செய்யும் முடிவை பெற்றொர் கைவிடவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் பானுப்பிரியா மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்துள்ளனர். ஆனால் அவரை காணவில்லை. வீட்டின் அருகே உள்ள கிணற்றிக்கு அருகில் அவருடைய காலணிகள் கிடந்துள்ளது இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்த போது பானுபிரியா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பானுபிரியா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

இதனைதொடர்ந்து முசிறி தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து பானுப்பிரியாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Woman commited to suicide


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal