நெல்லையில் வெடித்தது போராட்டம்!...தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்! - Seithipunal
Seithipunal


நெல்லையில் பட்டியலின சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய  வலியுறுத்தி, சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், மேலப்பட்டம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன் அதே பகுதியில் கல்லூரி படித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டிற்கு அருகே சென்ற கார் ஒன்று, மாணவன் மீது மோதுவது போல் வேகமாக வந்துள்ளது.

அப்போது காரை ஏன் இவ்வளவு வேகமாக ஒட்டி வந்தீர்கள் என்று தடுத்து நிறுத்தி கேட்ட போது, 17 வயது சிறுவனின் வீட்டிற்கே சென்று காரை ஒட்டி வந்தவர்கள் அறிவாள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த நிலையில், தாக்குதல்  நடத்தப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய  வலியுறுத்தி, சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நெல்லை எஸ்.பி. சிலம்பரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A protest erupted in nellai road blockade demanding the arrest of the attackers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->