கத்துக்குட்டியான ஒருவர்… அப்படியென்றால் கோடநாட்டில் தெருவில் நின்ற போது ஜெயலலிதாவை Miss. ஜெயலலிதா என்று கூறியிருப்பாரா?- விஜயை விமர்சித்த சரத்குமார்!
A person who is a scoundre So would he have called Jayalalithaa Miss Jayalalithaa while standing on the street in Kodanad Sarathkumar criticized Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் நடைபெற்றது. அங்கு பேசிய கட்சித் தலைவர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக குறிவைத்து,
மீனவர்களின் பாதுகாப்பிற்காக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும், அது போதும்.பிடிவாதத்தால் திணிக்கப்பட்ட NEET தேர்வை ரத்து செய்ய வேண்டும், அது போதும்.செய்வீர்களா நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி?
என்று கேள்வி எழுப்பினார். மேலும், “தாமரை இலையில் தண்ணி ஒட்டாது… அப்படியே தமிழக மக்களும் ஒட்ட மாட்டார்கள்”எனக் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், தனது பிறந்தநாள் முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கடுமையாக எதிர்வினையாற்றினார்.
அவர் கூறியதாவது:தமிழை வளர்த்துக் கொண்டிருப்பவர் மோடி தான்; உலகின் மாபெரும் தலைவர் மோடி. கடந்த 12 ஆண்டு மோடி ஆட்சியில் ஒரு மீனவர் கூட உயிரிழந்ததாக இல்லை. கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக.விஜய் பிரதமரை Mr. என்றும், முதல்வரை Uncle என்றும் கூறுகிறார். கத்துக்குட்டியான ஒருவர்… அப்படியென்றால் கோடநாட்டில் தெருவில் நின்ற போது ஜெயலலிதாவை Miss. ஜெயலலிதா என்று கூறியிருப்பாரா?
சிங்கம் வேட்டைக்கு மட்டும் வெளியே வந்து, பின்னர் தூங்கி விடும். அந்த மாதிரி சிங்கமாக இருக்கக் கூடாது. தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்க NEET அவசியம். அதை ரத்து செய்ய வேண்டும் என்பதே தவறு.கூட்டத்திற்காக கூட்டப்பட்ட மக்கள் கூட்டமே, உண்மையான மக்கள் ஆதரவு அல்ல” எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
விஜயின் நேரடி தாக்குதலுக்கும், சரத்குமார் வெளிப்படையான கண்டனத்திற்கும் இடையே, தமிழக அரசியல் அரங்கம் பரபரப்பாகியுள்ளது. கச்சத்தீவு – NEET என்ற இரண்டு முக்கிய பிரச்சினைகளைச் சுற்றியே இந்த விவாதம் தீவிரமடைந்து வருகிறது.
English Summary
A person who is a scoundre So would he have called Jayalalithaa Miss Jayalalithaa while standing on the street in Kodanad Sarathkumar criticized Vijay