பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்..மரத்துப் போய்விடவில்லை மனித நேயம்!
A mothers heart is soft a childs heart is like stone Humanity has not been lost
மரத்துப் போய்விடவில்லை மனித நேயம். உயிர்ப்புடன் தான் உள்ளது என்பதற்கு ஆண்டிபட்டியில் நடந்த நிகழ்வு உதாரணமாகியுள்ளது.
சென்னையில் இருந்து ஒருவர் தனது வயதான தந்தையை ரயிலில் ஏற்றிவிட்டு, செலவுக்கு பணமும் கொடுத்து சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்,அப்போது அந்த முதியவரும் ஆண்டிபட்டி ரயில் நிலையத்தில் இறங்குகிறார் .அடுத்து தனது சொந்த கிராமமான வடுகபட்டிக்கு வழி தெரியாமல், கம்பை ஊன்றியபடி, வந்த வழித்தடத்திலேயே நடந்து செல்கிறார். பலரும் அவரை பார்த்தும் ,என்ன? ஏது என்று கேட்கவில்லை .
இந்நிலையில் அவ்வழியாக நடை பயிற்சிக்கு வந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜி. கே .பாண்டியன் அவரை மதித்து யார் நீங்கள்? எங்கே செல்ல வேண்டும், நிலை தடுமாறி கீழே விழுந்து விடாதீர்கள் என்று அக்கறையுடன் விசாரிக்கிறார். அப்போது அந்த வயதான பெரியவர், தான் சென்னையில் இருந்து வந்ததாகவும், வடுகபட்டிக்கு செல்ல வேண்டும் ,வழி தெரியவில்லை. ஆண்டிபட்டி பஸ் நிலையத்திற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
அப்போதுதான் அவருடைய நிலை புரிந்து, அவரை பத்திரமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி பஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து தான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது, பணம் வேண்டாம், என்னிடம் இருக்கிறது. உதவி மட்டும் செய்யுங்கள் என்று அந்த பெரியவர் கூறியுள்ளார். மணமுடைந்து போன ஜி.கே. பாண்டியன் பெரியவரின் மகனை திட்டி, இப்படி செய்ய உங்கள் மகனுக்கு எப்படி மனம் வந்தது என்று கூறியுள்ளார் .அப்போது அந்த பெரியவர் எனது மகனை சபிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் செயல். உதவி மட்டும் செய்யுங்கள் என்று கூறியுள்ளார் .பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல் என்று சொல்லும் பழமொழி நினைவுக்கு வர, அந்த பெரியவரை சாப்பிட வைத்து வழி அனுப்பி உள்ளார் ஜி .கே. பாண்டியன். மனிதநேயம் மரத்துப் போய்விடவில்லை என்ற நிலை அப்போதுதான் புரிந்தது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. மனமும் வேண்டும் என்ற புரிதல் நினைவுக்கு வந்தது .வாழ்க மனிதம்.
English Summary
A mothers heart is soft a childs heart is like stone Humanity has not been lost