சாக்கடை கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் சாக்கடை கால்வாயில் கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் புதிய அழகாபுரம் சாலை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man body rotting in a drainage in salem


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->