சொந்த மகளை பலவந்தப்படுத்திய தந்தை.! மருத்துவமனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!! போக்ஸோ சட்டத்தில் கைதாகியும் நேர்ந்த துயரம்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூலுவம்பட்டிக்கு அருகில் இருக்கும் வெள்ளிவேடு பகுதியை சார்ந்தவர் இராமலிங்கம் (வயது 35). இவர் சுமை தூக்கும் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் சுத்தம் செய்யும் பணியாளராக பணியாற்றி வருகிறார். 

இவர்கள் இருவரும் கடந்த 13 வருடங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்., இவர்களின் மகள் அங்குள்ள தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு பயின்று வருகிறார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இராமலிங்கத்தின் மனைவி வேலைக்கு சென்று விடவே., அந்த நேரத்தில் பள்ளி விடுமுறை நேரம் என்பதால் மகள் வீட்டில் இருந்துள்ளார். அன்று வீட்டில் இருந்த தனது மகளை கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தியுள்ளார். 

இந்த விசயத்தை தனது மனைவிக்கு தெரியாமலேயே,, தொடர்ந்து மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில்., தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறியவுடன்., சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

மருத்துவமைனயில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து விஷயம் குறித்து தனது மகளிடம் கேட்டறிந்த தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு இராமலிங்கத்தை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்., இப்பகுதியில் உள்ள செல்வராகபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சொந்த மகளை தந்தை மற்றும் தந்தையின் சகோதரர் பலாத்காரம் செய்ததும்., அவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl rapped by her father in Coimbatore


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal