10 இலட்சத்தை வாங்கிவிட்டு கம்பி நீட்டிய கொடூரன்.. மகனுடன் வீதியில் பெண்மணி தர்ணா..! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர். இவர்கள் இருவருக்கும் கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் தற்போது தக்ஷிணேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், கடந்த வருடத்தின் போது திருப்பூரில் உணவகம் ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்று, மனைவி சுபாவின் உறவினர்களிடம் ஸ்ரீதர் ரூபாய் 10 இலட்சம் கடனாக பெற்று உள்ளதாக தெரியவருகிறது. 

இதன்பின்னர், அவருக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, மனைவி சுபா மற்றும் மகன் தன்ஷினேஷை வீட்டை விட்டு அடித்து துரத்திவிட்டு, அந்த பெண்ணுடன் தற்போது குடும்பம் நடத்தி வருவதாக தெரியவருகிறது. 

இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் அனைவரும் சுபாவிடம் கடனை கேட்டு பிரச்சனை செய்யவே, பணத்தை திரும்ப பெறுவதற்காக கணவரின் வீட்டிற்கு சுபா தனது மகனுடன் வந்துள்ளார். அந்த சமயத்தில், கணவர் ஸ்ரீதரும், ஸ்ரீதரின் தாயார் சுசீலாவும் சேர்ந்து சுபா மற்றும் அவரின் மகனை வீட்டிற்குள் விடாமல் விரட்டி அடித்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த பெண்மணி, கணவர் வீட்டு முன்பு தனது மகனுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Girl Dharna Husband House due to Cheating and 10 Lakh Loan Fraud


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal