கொடுங்கையூர் அருகே கொடூரம்; காதலி கண் முன்னே சரித்திர பதிவேடு ரவுடி படுகொலை; 06 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னை தண்​டை​யார்​பேட்டை நேரு நகர் 11-வது தெருவை சேர்ந்​தவர் பிரபல ரவுடி பங்​காரு என்கிற 21 வயதுடைய அருண். இவர் சி கேட்​டகரி ரவுடி​யும் சரித்​திர பதிவேடு குற்​ற​வாளி​யு​மாவார். அருண் மீது கொருக்​குப்​பேட்​டை, தண்​டை​யார்​பேட்டை உள்​ளிட்ட பல்​வேறு காவல் நிலை​யங்​களில் கொலை, கொலை முயற்​சி, அடிதடி உட்பட 10-க்கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளது.

இந்நிலையில் கடந்த 06 மாதங்​களுக்கு முன்பு ரவுடி அருண் கொடுங்​கையூர் எழில் நகர் 09-வது தெரு​வில் உள்ள குடிசை மாற்று வாரிய குடி​யிருப்​பில் தாயுடன் குடியேறி​யுள்ளார். நேற்று முன்​தினம் இரவு சுமார் 10 மணி​யள​வில் ரவுடி அருண் தனது காதலி தர்​ஷினி உடன் வீட்​டில் பேசிக் கொண்​டிருந்​துள்ளார்.

அப்​போது இருசக்கர வாக​னத்​தில் வந்த 06 பேர் கொண்ட கும்​பல் வீட்​டினுள் புகுந்து அருணை காதலி கண்​முன்னே வெட்டி கொலை செய்து விட்டு தப்​பிச் சென்றுள்ளனர். கும்பலால் வெட்டப்பட்ட ரவுடி அருண் ரத்த வெள்​ளத்​தில் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலி தர்​ஷினி கதறி அழுததைப் பார்த்த அக்​கம் பக்​கத்​தினர் ஓடிவந்து அருணை மீட்டு ஸ்டான்லி மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்​பவம் குறித்து உடனடியாக தகவல் அறிந்த கொடுங்​கையூர் போலீஸார் மருத்​து​வ​மனைக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு கொலை​யான ரவுடி அருண் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.‌ 

போலீசார் ரவுடி அருண் கொலைக்​கான காரணம் என்ன..? அவரை கொலை செய்தவர்கள் யார்..? முன்விரோதம் காரண​மாக இந்த கொலை நடை​பெற்​றதா..? என பல கோணங்​களில் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அத்துடன் கொலை செய்த 06 பேர் கொண்ட கும்​பலை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A famous rowdy was murdered in front of his girlfriend near Kodungaiyur


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->