ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம்..அடிக்கல் நாட்டிய அமைச்சர்!
A community hall worth 1 crore 80 lakhs laid the foundation by the minister
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 3 இடங்களில் ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன் அடிக்கல் நாட்டினர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, பழைய செம்பட்டி சொக்கலிங்கபுரம், வீரசிக்கம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மூலதனம் மானிய நிதி ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவின் பேரில், பூமி பூஜை நடைபெற்றது.
அதன்படி போடிக்காமன்வாடி ஊராட்சி சொக்கலிங்கபுரத்தில் ரூபாய் 80 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், வீரசிக்கம்பட்டியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி, பழைய செம்பட்டியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான, நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன் தலைமை வைத்தார். ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பத்மாவதி வரவேற்று பேசினர்.
நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் க.நடராஜன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் ராமநாதன், போடிகாமன்வாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி சசிகுமார், மணலூர் மணிகண்டன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் சொக்கலிங்கபுரம் சசிகுமார், போடிகாமன்வாடி ஊராட்சி மன்ற செயலர் திருப்பதி மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
A community hall worth 1 crore 80 lakhs laid the foundation by the minister