30 பவுன் நகை-பணத்துடன் மாயமான மணப்பெண்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?  - Seithipunal
Seithipunal


30 பவுன் நகை-பணத்துடன் மாயமான மணப்பெண் தஞ்சாவூரில் மீட்கப்பட்டுள்ளார். அவரை  அழைத்து வந்தால்தான் வீட்டிலிருந்து எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரிய வரும்.


நாகர்கோவில் வடசேரி வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் மிருதுளா குமார், பி.காம் பட்டதாரி இவரது மகள் ஆரதி ,இவருக்கு வருகிற 4-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு  திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சம்பவத்தன்று பெற்றோர் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றிருந்த போது வீட்டில் ஆரதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வெளியே சென்றுவிட்டு தந்தை மிருதுளா குமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகளை காணவில்லை. உடனடியாக அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்துடன் ஆரதி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து மிருதுளா குமார் வடசேரி போலீசில் புகார் அளித்ததன்  பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆரதி தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  தான் தஞ்சாவூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறினார்.இதையடுத்து பெற்றோர் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மகளை அழைத்து வருவதற்காக ஆரதியின் பெற்றோர் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவரை மீட்டு அழைத்து வந்தால்தான் வீட்டிலிருந்து எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரிய வரும்.இந்தசம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A bride with 30 pounds of jewelry and money Do you know what happened in the end?


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->