தமிழ்நாட்டில் மதுவால் சோகம்.. "இரு வேறு சாலை விபத்து".. ஈ.சி.ஆரில் 9 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள வயலூரில் கூவத்தூரில் இருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த கார்பனேட் இரவு கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீட்க முயன்ற போது அவர்களால் முடியவில்லை. இதனை எடுத்து வெல்டிங் கடை வைத்திருக்கும் நபரின் உதவியுடன் காரில் இருந்த நபர்களை மீட்டனர். 

அதில் மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. கவலைக்கிடமாக இருந்த இரண்டு பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ராஜேஷ், ஏழுமலை, விக்கி என்பது தெரியவந்தது.

 

இவர்கள் அனைவரும் மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இந்த கோர விபத்து செய்தி அடங்குவதற்குள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் கார் ஓட்டுனர் சரவணன் மற்றும் அதில் பயணம் செய்த ஜெய் பிணித்தா மற்றும் அவரது மகன்கள் விஷால், பைசல் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் அடுத்தடுத்து இருவேற சாலை விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 people died in different accident in ECR


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->