8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. வெளியான அதிர்ச்சி காரணம்?
8th std student got suicide for cellphone fight
அக்கா செல்போன் தராததால் கோபத்தில் 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தைக்கா தெருவில் மைக்கேல் ராஜ் - மேரி தம்பதி இருந்துள்ளனர். இவர்களுக்கு தருண் என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல் ராஜ் உயிரிழந்து விட்டார். இதனால் அவரது மனைவி மேரி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து தனது பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் இருந்த மகன் தருண் திடீரென கோபமாக அறைக்குள் சென்றுள்ளார் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாய் மேரி சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அலறியடித்து மகனை மீட்ட தாய் மேரி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சிறுவனின் மரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தருணுக்கும் அவரது அக்காவுக்கும் செல்போனை யார் பயன்படுத்துவது என்ற சண்டையில் கோபமடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
English Summary
8th std student got suicide for cellphone fight