மாற்றுத்திறனாளி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. 81 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை.!
81 old man 20 years Jail for harrasment case in Ariyalur
மாற்றுத்திறனாளி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 81 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள அரங்கோட்டையை சேர்ந்த முதியவர் சுந்தரம் (வயது 81). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 15 வயதான பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் முதியவர் சுந்தரத்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் முதியவர் சுந்தரத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முதியவர் சுந்தரம் ஏற்கனவே வேறு ஒரு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
81 old man 20 years Jail for harrasment case in Ariyalur