அண்ணா நகர், செனாய் நகரில் தெருநாய்கள் கடித்ததில், முதியவர், சிறுவர்கள் உள்பட 08 பேர் படுகாயம்..!
8 people including an elderly man and children were seriously injured in a stray dog attack in Anna Nagar Chennai
அண்ணாநகர் 08-வது மண்டலத்துக்கு உட்பட்ட செனாய்நகர் அருணாசலம் தெருவில் நேற்றிரவு சாலையில் நடந்துச்சென்ற பெரியவர் மற்றும் சிறுவர்களை தெருநாய்கள் விரட்டி, விரட்டி கடித்துள்ளது. இதில் முதியவர், சிறுவர்கள் உள்பட 08 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுடன் விரைந்து வந்து தெரு நாய்களை பிடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’எங்கள் பகுதியில் தெருநாய் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம் என்றும், அண்ணாநகர் 08-வது மண்டல அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.
3e
அத்துடன், தெரு நாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவோ அல்லது தொந்தரவு செய்துவரும் தெரு நாய்களை பிடித்து செல்லவோ நடவடிக்கை மேற்கொள்ளாததால் நாய்கள் அதிகமாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றிரவு செனாய் நகர் அருணாச்சலம் தெருவில் 08 பேரை தெரு நாய் கடித்து குதறிவிட்டது. இதன் போது காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், இனிமேலாவது ஆபத்துவரும் முன்னே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
8 people including an elderly man and children were seriously injured in a stray dog attack in Anna Nagar Chennai