78 யூ டியூப் செய்தி சேனல்கள் முடக்கம்.!  - Seithipunal
Seithipunal


பிரபல காணொளி சமூக வலைத்தளமான யூ டியூப் தளத்தில், 78 செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒரு கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அதில், நாட்டில் பல்வேறு யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தெரிவித்திருந்தார். 

அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராதாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில்,

"யூடியூப் தளத்தில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் மற்றும் 560 யூ டியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 - படி மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது"

என்று அந்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

78 YOUTUBE news channels ban july


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->