7.42 கோடி வாக்காளர்கள்.. வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
74.2 million voters Election Commission releases the revised electoral roll for voters
பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது . அதில் தேர்தல் ஆணையம்மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ள நிலையில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்ததுஇதனால் தேர்தல் ஆணையம் NRC-யை மறைமுகமாக அமல்படுத்த பாஜக, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மேலும் பலரது வாக்குகள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கடுமையாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டபோது ஆதார்டு கார்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர். முன்னதாக 32,03,370 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 32,91,478 அதரித்துள்ளனர்.
பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நவடா மாவட்டத்தில் 30,491 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
74.2 million voters Election Commission releases the revised electoral roll for voters