6-வது நாளாக தொடர்ந்து வரும் 6500 கன அடி நீர்வரத்து... ஒகேனக்கல்லில் குவியும் சுற்றுலா பயணிகள்...!
6500 cubic feet water continues 6th day Tourists flock to Hogenakkal
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் மழையினால், சுற்றுலாத் தளமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரிப்பதும்,குறைவதுமாக இருந்து வருகிறது.

இதனிடையே, இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 6 நாளாக 6500 கனஅடியாக நீடித்து வந்தது.இருப்பினும்,அங்கு நீர்வரத்து குறைந்தபோதிலும் ஐந்தருவி, சினிபால்ஸ்,மெயின் அருவி,உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அங்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து வருகின்றனர்.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்,காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
6500 cubic feet water continues 6th day Tourists flock to Hogenakkal