திருச்சி அருகே திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்
6 injured in van accident in Trichy near
திருச்சி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற இருந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டத்தை 10-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது. இதனால் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் திடீரென்று பிரேக் பிடித்துள்ளார்.
அப்பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
6 injured in van accident in Trichy near