துணிவு மற்றும் வாரிசு படத்தால் 5 திரையரங்குகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஆத்தூரில் 5 திரையரங்குகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்த துணிவு ஆகிய 2 திரைப்படங்களை வெளியிட்டனர்.

இதில் இந்த படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கு உரிய அனுமதி வாங்காமல் திரையிட்டுள்ளனர். மேலும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதுவரை திரையரங்கு உரிமையாளர்கள் முறையாக விளக்கம் அளிக்காததால் 5 திரையரங்குகளை மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 theatres closed in Salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->