தவெக விஜய் உடன் கூட்டணி வேண்டுமென கேட்பது காங்கிரஸாரின் ஜனநாயக உரிமை; ராகுல் காந்தி சரியான முடிவை எடுப்பார்; சுதா எம்.பி பேட்டி..! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கேட்பது காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களின் ஜனநாயக உரிமை என மயிலாடுதுறை எம்.பி. சுதா தெரிவித்துள்ளார். இது குறித்து கும்பகோணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுதா எம்.பி. கூறியதாவது:

கும்பகோணத்தில் 2028-ஆம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெறுவதையொட்டி, ரயில்வே துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தஞ்சாவூர்- விழுப்புரம் இடையே இரட்டைப் பாதை அமைக்க மத்திய ரயில்வே சர்வே குழுவினர் ஆய்வு செய்துள்ளனர் என்றும்,  அந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்யும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றதாகவும், அதில், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் 'பட்ஜெட் ஓட்டல்கள்', அனைத்து நடைமேடைகளிலும் நகரும் படிக்கட்டுகள், லிஃப்ட், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன், கும்பகோணத்தில் இருக்கும் குட்ஷெட், திருநாகேஸ்வரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பயணிகளுக்காக 02-வது நுழைவு வாயில் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மகாமகப் பெருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதன்முதலில் தான் குரல் கொடுத்துள்ளதாகவும் சுதா எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அத்துடன், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள்தான் எங்களின் பொது எதிரி என்று தெரிவித்துள்ளார். 

அதேப்போன்று, தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்கள் கருத்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை என்றும், ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு மூத்த தலைவர் ராகுல் காந்தி சரியான முடிவை எடுப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி குறித்து தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் விரக்தியில் பேசியதாகவும், காங்கிரஸ் கட்சி மக்களின் நலனுக்காகவும், கூட்டணி தர்மத்துக்காகவுமே இருக்கும் என்று மேலும், தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MP Sudha stated in an interview that it is the democratic right of the Congress party members to ask for an alliance with TVKs Vijay


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->