கணவனின் துன்புறுத்தல்; 11 மாத குழந்தையை கொன்று, தற்கொலை செய்துக் கொண்ட தாய்; துக்கம் தாளாது விஷம் அருந்திய பாட்டி..!
A mother killed her 11 month old child and committed suicide due to harassment from her husband
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் ராமண்ணா பேட்டையை சேர்ந்தவர் யஷ்வந்த் ரெட்டி. இவரது மனைவி சுஷ்மிதா (வயது 27). இந்த தம்பதிக்கு அஸ்வந்த் நந்தன் (10 மாதம்) என்ற குழந்தை இருந்துள்ளது. அஸ்தினாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசித்து வந்த நிலையில், சுஷ்மிதாவுக்கு குழந்தை பிறந்தது முதல் அவரை யாருடனும் பேசக்கூடாது, வெளியே செல்லக்கூடாது என்று கூறி அவரது கணவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் தம்பதி இடையே, அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று முன்தினம் காலை யஷ்வந்த் ரெட்டி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுஷ்மிதா தனது 10 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுஷ்மிதாவின் தாய் லலிதா (50 வயது) என்பவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக இந்த தற்கொலை சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவரின் துன்புறுத்தல் காரணமாக சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A mother killed her 11 month old child and committed suicide due to harassment from her husband