தங்கப் பிரியர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்...! ஒரே நாளில் பவுனுக்கு அதிரடி சரிவு... சட்டென குறைந்த தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.2,160 குறைந்து, ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார நிலவரம், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் மற்றும் உலக பங்குச்சந்தைகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை தினமும் மாறுபடுகிறது.

உலகின் முன்னணி தங்க இறக்குமதி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களும் தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நேற்று தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்திருந்த நிலையில், இன்று சந்தை தொடங்கியதும் விலை சரிவை சந்தித்துள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,433-ஆக உள்ளது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.11,045-ஆக விற்பனையாகிறது.வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Very happy news gold lovers Pound falls sharply single day Gold prices suddenly drop


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->