300 கிலோ ரேஷன் அரிசி அதிரடி பறிமுதல்...! ரகசிய வேட்டையாடி 3 பேரை கூண்டோடு தூக்கிய காவல்துறை...!
300 kg ration rice seized Police arrest 3 people secretly hunting
சென்னையில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 3 பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை வியாசர்பாடி புதுநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துணைக் காவல் கண்காணிப்பாளர் கோபாலகுரு தலைமையிலான தனிப்படை காவலர்கள், சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர் செந்தில்முருகன், உதவியாளர் சியாம் மூர்த்தி மற்றும் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் முகமது அலியார் ஆகிய 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளதாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
300 kg ration rice seized Police arrest 3 people secretly hunting