'அவரை நீக்கினா அரசு கவிழ்ந்துடுமா என்ன'...? - பிரதமருக்கு எதிராக பெ. சண்முகம் எழுப்பிய கடுமையான கேள்வி...!
If he removed government collapse P Shanmugam tough question against Prime Minister
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய மத்திய அரசு, அதற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான காவலர்களையும் துணை ராணுவப் படையினரையும் களமிறக்கி போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
மேலும், இணையதள இணைப்பைத் துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது உள்ளிட்ட தேவையற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களின் குரலை அடக்குவதற்குப் பதிலாக, அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.தர்மேந்திர பிரதான் என்ற ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவதால் மத்திய அரசு கவிழ்ந்துவிடுமா? ‘உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும்’ என்பது பழமொழி.
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கும், அதன் காரணமாக மாணவர்கள் எதிர்கொண்ட வேதனைகளுக்கும் பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கையை சந்திக்க வேண்டும்.
எனவே, தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கி, மாணவர்களின் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவை பிரதமர் மோடி உடனடியாக எடுக்க வேண்டும்” என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
English Summary
If he removed government collapse P Shanmugam tough question against Prime Minister