5 மாத கர்ப்பிணி மர்ம சாவு..போலீசார் விசாரணை!
5-month pregnant mysterious death Police investigation
5 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் ஏரியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஏழுமலை. இவருக்கும் 23 வயதான தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தநிலையில் மனைவி தனலட்சுமி 5 மாத கர்ப்பமாக இருந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் தனலட்சுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் குடும்பத்தினர் அவரை மீட்டு பெரும்பாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது மருத்துவர்கள் பரிசோதித்தபோது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஏரியூர் போலீசார் விரைந்து சென்று தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏழுமலையை 2-வது திருமணம் செய்ததும் தெரியவந்தது.5 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
5-month pregnant mysterious death Police investigation