4 மாதங்கள் தலைமறைவு…! இறுதியில் சிக்கிய போக்சோ குற்றவாளி...! - காவலர்கள் அதிரடி கைது - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் தொடர்புடைய கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த 35 வயதான மாரியப்பன், காவலர்களின் தீவிர தேடுதலில் இறுதியாக சிக்கியுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் தொடர்ந்து 4 மாதங்களாக தவிர்த்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனால், திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.இந்த நிலையில், அவரை கண்டுபிடிக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும்,  நீண்டநாள் தேடுதலுக்கு பின்னர், நேற்று மாரியப்பன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது, அவருக்கு எதிராக சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 months run POCSO criminal finally caught Police arrest him swift action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->