விஜயை சமாளிக்க களமிறக்கப்படும் 4 நடிகைகள்’..! திமுகவின் கலைஞர் வித்தை..! பிளானை உடைத்த பழ.கருப்பையா..!
4 actresses to be fielded to take on Vijay DMK artistry The fruit that broke the plan
சென்னை:
அரசியல் மேடையில் நடிகர் விஜயின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை கிளம்பி வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், அரசியல் விமர்சகருமான பழ.கருப்பையா தன் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய், பாஜக, அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளையும் ஒரே மேடையில் விமர்சித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலினை "அங்கிள்" எனக் குறிப்பிட்டதோடு, தன்னை "முதல்வர் வேட்பாளர்" எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் சூழலில் புதிய விவாதங்களுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் பழ.கருப்பையா,“விஜயிடம் தெளிவான அரசியல் கொள்கை இல்லை. மூன்றாவது மாற்று அணி என்ற பெயரில் முன்பு பல கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. இதே தவறை விஜயும் மீண்டும் செய்யக் கூடும். விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் 2016-இல் 13 சதவீத வாக்குகளை பெற்றார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கே வாய்ப்பு இருந்த நிலையில், உளுந்தூர்பேட்டையில் தானே தோற்று மூன்றாவது அணியின் வாய்ப்பை முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதே நிலை விஜயுக்கும் ஏற்படலாம்”
என்றார்.
மேலும் அவர் சுட்டிக்காட்டுகையில்,“தமிழக அரசியலில் இரண்டு கட்சிகள் – திமுக, அதிமுக – உறுதியாக நிற்கின்றன. அவற்றில் ஒன்றை பலவீனப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் விஜய் நேரடியாக ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் களம் இறங்கினால் அது தோல்வியில்தான் முடியும். விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால்தான் திமுக ஆட்சியை வீழ்த்த முடியும். இல்லாவிட்டால் சிரமமே அதிகம்”
என்று தெரிவித்தார்.
விஜயின் அரசியல் பேச்சுகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் பழ.கருப்பையா கூறினார்.“எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோர் ஒரு அரசியல் தேவையையும், நெருக்கடியையும் பிரதிபலித்ததால் வெற்றி பெற்றனர். ஆனால் விஜயின் பேச்சுகளில் அந்த அரசியல் தீவிரம் இல்லை. மாநாடு முடிந்த பிறகு தொண்டர்களின் மனதில் ஒரு சிந்தனையாவது பதிய வேண்டும். ஆனால் விஜயின் கூட்டங்களில் அது நடக்கவில்லை”
என்று விமர்சித்தார்.
திமுகவின் எதிர்கால அரசியல் யுக்திகள் குறித்து அவர் எச்சரித்தும் பேசினார்:“விஜயின் கூட்டங்களை எதிர்க்க, திமுக நடிகைகளை அரசியல் மேடைக்கு கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது. விஜய் கூட்டம் நடத்தும் இடங்களில் அடுத்த நாளே நடிகைகளை அனுப்பி, கூட்டத்தை சமன்படுத்துவார்கள். இதன் விளைவாக விஜய் பழைய அரசியல் கதை போலவே முடிவடையக்கூடும்”
என்றார்.
விஜயின் அரசியல் நடைமுறைகள் குறித்து வந்துள்ள இந்த கூர்மையான விமர்சனம், அவரது அடுத்த கட்ட அரசியல் பயணத்தை எந்த அளவு பாதிக்கும் என்பது தற்போது கவனிக்கத்தக்க கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
4 actresses to be fielded to take on Vijay DMK artistry The fruit that broke the plan