மக்களே உஷார்.!! இடி தாக்கியதால் வெடித்த செல்போன்.!! திருச்சி பெண்களுக்கு நேர்ந்த கதி.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மணப்பாறை அருகே மருங்காபுரி பகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் எனது தோட்டத்தில் 2 பெண்களுடன் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில் மணிமேகலை தனது இடுப்பில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது. இதனால் மணிமேகலைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று அவருடன் வேலை செய்து வந்த இரண்டு பெண்களும் வயல்களில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மன பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது நேரில் சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதே போன்ற சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மரத்தின் நடையில் செல்போன் உபயோகித்த இளைஞர் மீது இடி விழுந்ததில் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளியில் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3women injured mobile exploded due to lightning in Trichy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->