ஆம்பூரில் பரபரப்பு.. 33 பள்ளி மாணவர்களின் உடலில் திடீரென அலர்ஜி.!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 33 மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களில் ஒருவர் பின் ஒருவராக உடல் முழுவதும் ஒவ்வாமை ஏற்பட்டதால் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை மின்னூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது ஆசிரியர் ஒருவருக்கும் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார். 

இந்தநிலையில் மின்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 மாணவர்களில் 5 பேருக்கு உடலில் ஏற்பட்ட ஒவ்வாமை அதிகரித்ததன் காரணமாக ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் மின்னூரில் உள்ள அரசு பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை முழுமையாக சுத்தம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பெயரில் தற்பொழுது தூய்மை பணியாளர் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

33 school students admitted to hospital due to allergy in Ampur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->