31ஆவது செவிலியர் மாணவர் சங்க மாநாடு..மாணவ- மாணவியர்களுக்கு மண்டல அளவிலான போட்டிகள்!
31st Nursing Student Association Conference District level competitions for students
திண்டுக்கல் ஜி.டி. என்.கல்லூரியில்31ஆவது செவிலியர் மாணவர் சங்க மாநாடு,இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் ஏற்பாடு திண்டுக்கல், இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தேசிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு சங்கமாகும்.
தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி மாணவர்களிடையே ஒரு உந்து சக்தியாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 254 கிளைகளைக் கொண்டு 58,000 செவிலிய மாணவ உறுப்பினர்களை கொண்டுள்ளது. மாணவ செவிலியர் சங்கம் மாணவர்களுக்கான தலைமை பண்பை உருவாக்கும் பயிற்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மிக முக்கியமாக உலக இளம் சாதனையாளர் பதிவேடு, ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகம் என பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை புத்தகதில் இடம் பெற்றுள்ளது.
புதுஉத்வேகத்துடன், இந்த சங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 31 வது மாநில மாணவர் சங்க மாநாட்டை 'இன்றைய கற்றல்! நாளைய வழி நடத்துதல்: ஒரு செவிலிய மாணவரின் பயணம்" என்ற கருப்பொருளுடன் திண்டுக்கலில் உள்ள ஜி டி என் செவிலியர் கல்லூரியில் மூன்று நாட்களுக்கு அதாவது 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை நடத்துகிறது. இந்த மாநாட்டுக்கு முன்னோட்டமாக மண்டல அளவில் 13 மண்டலங்களில் பல போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்கள் மாநில அளவில் நடக்கும் மாநாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டில் விளையாட்டுப் போட்டிகள் கலை சார்ந்த போட்டிகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிடும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இங்கு நடைபெறும் மாநாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் 5500 க்கும் மேற்பட்டசெவிலிய மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் தமிழக முழுவதிலுமிருந்து வந்து பங்கேற்க உள்ளார்கள் இந்த நிகழ்விற்கு மேலும் மெருகூட்டும் விதமாக மற்றும் செவிலிய மாணவர்களின் திறமையை வெளிக்காட்டும் வகையில் இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற ஒரு நிகழ்வு சுதந்திர தினத்தன்று நடத்தப்பட உள்ளது.
மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இடம் பெரும் மாணவ மாணவியர்கள் வரும் நவம்பர் மாதம் பூனேவில் தேசிய அளவில் நடைபெறும் செவிலியர் சங்க மாநாட்டில் பங்கேற்பார்கள்.இந்த நிகழ்வின் ஆரம்ப விழாவை தமிழ் மாநில பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தலைவர்டாக்டர் எஸ்.அனிகிரேஸ் கலைமதி தலைமை தாங்க, இந்திய ஆட்சிப் பணி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடிதலைமை விருந்தினராகவும், தமிழ்நாடு காவல் பணி சி.எம்.ஆர்.மணிமொழியன்கௌரவ விருந்தினராகவும், பங்கேற்க உள்ளார்கள்.
இந்த மாநாடானது மாணவர்களுக்கிடையே போட்டியைத் தாண்டி அவர்களின் கற்பனை வளத்தையும், திறமையையும், அர்ப்பணிப்பையும் போற்றும் விதமாக அமைந்துள்ளது. செவிலிய மாணவர் சங்கம் மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தன்னம்பிக்கை, தலைமைத்துவ பண்புகள் மற்றும் குழுவாக பணியாற்றும் தன்மை ஆகியவற்றை வளர்க்கும் ஒரு தளமாக அமைந்துள்ளது.
English Summary
31st Nursing Student Association Conference District level competitions for students