தூத்துக்குடி || இலங்கைக்கு கடத்தப்பட்ட 30 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்கு படகுமூலம் பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தருவைகுளம் கடற்கரை வழியாக பீடி இலை மூடைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி போலீசார் இன்று அதிகாலை தருவைகுளம் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் லோடு ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 62 மூட்டை பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 kilo beedi leaves seized in sri langan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->