#BREKING || ஐ.டி அதிகாரிகள் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு, டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையிலான திமுக தொண்டர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர்.

மேலும் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதோடு அவர்கள் பயணித்த கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த நான்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத திமுகவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் இன்று காலை திமுகவைச் சேர்ந்த 8 பேரை கரூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தற்பொழுது மேலும் 3 திமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கரூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது பல திமுக நிர்வாகிகள் இருந்ததால் கைது நடவடிக்கையில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 people including DMK councilor arrested in IT officials assault case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->