2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கணவர்.. உயிருடன் வந்த அதிசயம்? அதிர்ச்சியில் குடும்பத்தினர்!.
2years ago husband died who came alive family members shocked
ஆம்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர், 6 மாதங்களுக்கு முன்பு உயிருடன் இருக்கும் மனைவிக்கு போலி இறப்புச் சான்றிதழ் தயாரித்து சொத்துக்களை விற்பனை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா ரவிவர்மா. இவர்களுக்கு ஆந்திர மாநிலம், குப்பம் பி.இ.எஸ் மருத்துவ கல்லூரி அருகே சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான இரண்டு காலியிடங்கள் மற்றும் ஒரு வீடு உள்ளது.
காஞ்சனாவின் கணவர் ரவிவர்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார். இந்த நிலையில் காஞ்சனா தனது சொத்துக்களை விற்று பதிவு செய்ய வந்த பொழுது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
காஞ்சனா என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன காஞ்சனாவின் கணவர் வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் வேறொருவருக்கு இடத்தை விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காஞ்சனா மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கணவர் 6 மாதங்களுக்கு முன்பு எப்படி உயிருடன் வந்து பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியும் என தெரிவித்து, சார் பதிவாளர் வெங்கடசுப்பையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து அதை உறுதி செய்ய 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என சார்பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
English Summary
2years ago husband died who came alive family members shocked