அதிகாலையிலேயே... பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் நிறுவனத்தின் பேருந்து.! ஊழியர்களின் நிலை என்ன.?
20 injured in private company bus accident in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தனியார் நிறுவன பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவையிலிருந்து ஊழியர்களை ஏற்றுக்கொண்டு அந்த தனியார் நிறுவன பேருந்து செய்யாறு அடுத்த கொடையம்பாக்கம் கிராமத்தில் இன்று அதிகாலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலையில் நிகழ்ந்துள்ளதால் பேருந்து ஓட்டுனர் தூக்க கலகத்தில் இருங்களுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
20 injured in private company bus accident in Tiruvannamalai